( வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா இன்று (26) திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் தினமும் மாலை 3.00 தொடக்கம் 5.30 வரை அறநெறி மாணவர்களின் பஜனை இடம்பெறவுள்ளது.
மேலும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள்
பேச்சு
கதாப்பிரசங்கம்
பரதநாட்டியம்
வில்லுப்பாட்டு
வயலின் கச்சேரி
வீணை கச்சேரி
உடுக்கிசை என்பனவும் மேடையேறுகின்றன.
எதிர்வரும் 04ஆம் திகதி ஆயுத பூசையும் 05 ஆம் திகதி
வித்தியாரம்பமும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கை நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தினால் அடிப்படை சான்றிதழ் பயிற்சிகளுக்கான
வித்தியாரம்பம் இடம்பெறும்.
காலை 8.00 மணிக்கு
பரதநாட்டியம்
பண்ணிசை
கதாப்பிரசங்கம்
மிருதங்கம்
வயலின்
வீணை
சொற்பொழிவு ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க வித்தியாரம்பம் இடம் பெறவுள்ளது.
இதேவேளை போட்டி நிகழ்வுகள் எதிர்வரும்
01.10.2022 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1. தோரணம் கட்டுதல்
2. பூமாலை கட்டுதல்
3. பூச்சரம் தொடுத்தல்
மறுநாள் 2.10.2022 ஞாயிற்றுக்கிழமை
4. கோலம் போடுதல்
5. நிறைகுடம் வைத்தல்
6. சித்திரம் வரைதல்
ஆகிய போட்டிகள் நடைபெறும்.
மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment