நாட்டில் சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது.
இன்றும்(06) நாளையும்(07) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.
இதனிடையே, சமூக பாதுகாப்பு பங்களிப்பிற்கான வரி தொடர்பான சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானியும் இன்று(06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.


Post a Comment
Post a Comment