( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட
புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழாவானது கடந்த திங்கட்கிழமை (26)
கலைவாணி கனிஸ்ரவித்தியாலய அதிபர் ஆ.நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மற்றும் பாடசாலை பெயர் பலகை திரைநீக்கம் இடம் பெற்றது.
"இணைந்த கரங்கள்" அமைப்பு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
இந் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பண்ணிப்பாளர் வை. ஜெயசந்திரன், சிறப்பு அதிதிகளாக ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி கே.கருணாகரன், ஆலையடி வேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன். ஆயுள்வேத வைத்திய அதிகாரி பாத்திமா ஆமிலா ஜமால்டீன், கால் நடை வைத்திய அதிகாரி திருமதி.ரி. கோகுலதாஸ், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா கரீமா,மாதர் சங்க உறுப்பினர்கள் அப்பிரதேச ஆலய தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான எஸ். தினேஸ்ராஜ்,ரி.ஜனபாலசந்திரன் குடும்பத்தினரும்,கனகராஜ் நடராஜமணி குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கி இருந்தனர்.
அத்துடன் அதிக கஷ்ட
புளியம்பத்தைக் கிராமத்தில் இயங்கி வருகின்ற கலைவாணி வித்யாலயத்தில் கல்வி பயில்கின்ற 15 மாணவர்களுக்கும் மற்றும் அதே கிராமத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் திறந்து வைக்கப்பட்ட மகாசக்தி பாலர் பாடசாலையில் கல்வி பயில இருக்கின்ற 15 மாணவர்களுக்குமென மொத்தமாக 30 மாணவர்களுக்கு பாடசாலை நேரங்களில் சத்துணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இதனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள ராஜ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான புவனேஷ்ராஜாவிற்கு அனைவரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இப் பாடசாலைக்கு புதுப்பொலிவான பெயர்ப்பலகை செய்து திறந்து வைத்தமை இப் பாடசாலை சமூகத்தினையும் மாணவச் செல்வங்களையும் மகிழ்வுட்டும் நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான விளையாட்டு உபகரங்கள் மற்றும் உபகரணங்களை இணைந்த கரங்கள் அமைப்பு வழங்கிவைத்தது.
இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், மற்றும் எஸ்..காந்தன் கே.வாணன், மற்றும் இணைந்த கரங்கள் ஆதரவாளர்களான - எஸ். செல்வநாயகம் ஐயா ரி.லக்ஸ்மிகாந் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இணைந்த கரங்கள் அமைப்பினால் ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒரு மாத கொடுப்பனவு முன்பள்ளி ஆசியரிடம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment