( காரைதீவு சகா)
உயர்தர உயிரியல்த்துறையில் மூன்று பாடங்களிலும் மூன்று "ஏ" சித்திகளை பெறுவதற்கு எனக்கு அறநெறிகல்வி மிகவும் உதவியாக இருந்தது
என்று திருக்கோவில் வலயத்தில் பின் தங்கிய விநாயகபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் முதல் தடவையாக. உயிரியல்த்துறையில் மூன்று" ஏ" சித்திகளை பெற்ற முருகானந்தம் தனுஷ்கா என்ற மாணவி தெரிவித்தார்.
விநாயகபுரம் தமிழ் மகாவித்தியாலய வரலாற்றில் உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் மூன்று 'ஏ" சித்திகளை முருகானந்தம் தனுஷ்கா இம்முறை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவாகி இருக்கின்றார் என்பதை பாடசாலை அதிபர் த.புஸ்பராஜா உறுதிப்படுத்தினார்.
சாதனை மாணவி தனுஷ்கா கூறுகையில்..
அறநெறி கல்வியானது எனக்கு அதிகாலையில் எழுந்து கற்பதற்கும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருந்தது.மேலும்
அளிக்கப்பட்ட வழிகாட்டல் பயிற்சிகள் தியான பயிற்சிகள் மேலும் உதவியாக இருந்தது. இதன் ஊடாக எனக்கு உயர்தர பாடங்களை படிப்பதற்கு இலகுவாக இருந்தது. இந்த வேளையிலே கற்பித்த ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் இதற்கு உதவியாக இருந்த குருகுலத்தினர் அனைவரையும் நன்றியோடு பார்க்கின்றேன் என்றார்.
அறநெறிக்கல்வியை வழங்கிய தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண்.இராஜரெத்தினம்( கண்ணன்) பாராட்டுகையில்..
முருகானந்தம் தனுஷ்கா இளமையில் இருந்தே அறநெறிக் கல்வியை ஆர்வத்துடன் கற்று வந்தார். இவர் பின்தங்கிய விநாயகபுரம் கிராமத்தில் சிறந்த வைத்தியராக வருவார் என்று அன்றே ஆரூடம் கூறியிருந்தோம்.அது இன்று கனிந்திருக்கின்றது. எனவே அனைத்து இந்து மாணவர்களும் தொடர்ந்து அறநெறி கல்வியறிவை பெற்று கொள்ள வேண்டும் என்றார்.


Post a Comment
Post a Comment