கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் இன்று இரவு நடைபெற இருக்கும் ஆசியா கோப்பை டி20 போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வென்ற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
பின்னர் பாகிஸ்தான் - ஹாங்காங் இரு அணிகளும் விளையாடியபோது பாகிஸ்தான் அணி வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
மீண்டும் விளையாடும் இந்தியா பாகிஸ்தான்
தற்போது சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இன்று இந்தியாவுடன் விளையாடுகிறது பாகிஸ்தான். இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு, துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.
கடைசி ஓவர் வரை நீண்ட கடந்த ஆட்டத்தைப் போலவே, இந்த ஆட்டத்திலும் இன்னும் விறுவிறுப்பான அம்சங்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்' – பாகிஸ்தான் கேப்டன்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?
மைதானம் எப்படி?
இன்று போட்டி நடக்கும் மைதானத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் போட்டி தொடங்கும் நேரத்தில் வெப்பநிலை குறையலாம். ஆயினும் வெப்பம் என்பது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கை வகிக்கும்.
அணிகளில் என்னென்ன மாற்றங்கள்?
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் படேல் களமிறங்குவார். ஹர்திக் பாண்டியாவும் இந்தப் போட்டியில் ஆடுவார் என்று என்று நம்பப் படுகிறது. எனினும் தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பண்டா என்ற கேள்வி இன்னும் தொடருகிறது.
பாகிஸ்தானில் அணியின் ஷானவாஸ் தஹானி காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் இடம்பெறக்கூடும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?
ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து, 147 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு. இதேபோல ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை உயர்த்தினர். 29 பந்துகளில் ஜடேஜா 35 ரன்களும் 17 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்தியா பாகிஸ்தான்
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தப் போட்டியை ஹர்திக் பாண்டியா அற்புதமாக முடித்ததாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸாம் பாராட்டு தெரிவித்தார். அவர், "நாங்கள் ஒரு 10 -15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஹானி சேர்த்த சில ரன்கள் எங்களுக்கு உதவியது. இருந்தாலும் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்," எனக் குறிப்பிட்டார்.
இப்படியாக முடிந்தது இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி. இந்த நிலையில், இன்று மீண்டும் இரு அணிகளும் விளையாட உள்ளன.
ஆட்டத்தின் தொடர் நிகழ்வுகள் இந்தப் பக்கத்தில் நேரலையாக பதிவேற்றப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்.
.webp)

Post a Comment
Post a Comment