மனவெழுச்சி பயிற்சிப்பட்டறை



 


நூருள் ஹுதா உமர்


தற்கொலையை தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மனவெழுச்சி பயிற்சிப்பட்டறை இன்று (12)  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித் ஆரம்ப உரையை நிகழ்த்தியதுடன் தற்கொலையை தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மனவெழுச்சி பயிற்சிப்பட்டறையின் விரிவுரையை உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபல் நடாத்தினார்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வை உளநலப்பிரிவு ஏற்பாடு செய்ததுடன் பணிப்பாளரின் வழிகாட்டலில் இவ்வாறான நிகழ்வுகள் உளநலப்பிரிவினால் சமூக மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.