(வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனைப் பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14) புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த அந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பதாகைகளுடன் கலந்து கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை போரம் மற்றும் திருகோணமலை யில் உள்ள மனிதாபிமான வள நிலையம் ஆகிய அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள ஆவணங்கள் திருடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் மனித உரிமை ஆணைக்குழு கல்முனைப் பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது..


Post a Comment
Post a Comment