தங்கப்பதக்கம் வென்ற கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவி வி.டில்ருக்சனி



 


வி.சுகிர்தகுமார்  


  நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாண மாகாண மட்ட விளையாட்டு விழாவில் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவி வி.டில்ருக்சனி கல்வி சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவியே இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

பாடாசலையின் அதிபர் மு.சண்டேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழாவானது கோளாவில் பிரதேசத்தின் பிரதான வீதியில் இருந்து ஆரம்பமானது. அங்கு மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய குழுவினரின் வரவேற்பு இசையோடு ஆரம்பமான கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் அதிபரால் வெற்றி பெற்ற தங்கப்பதக்கம் மாணவிக்கு அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் சகிதம் பாடசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவியை வீதி ஓரங்களில் காத்திருந்த மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

இதேநேரம் பாடாசலையின் நுழைவாயிலில் சக மாணவர்களால் மலர் தூவி வரவேற்பளித்திருந்தமை சிறப்பம்சாக அமைந்திருந்தது

வரவேற்பில் மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற மாணவி ஒருவரும் பயிற்சி அளித்த ஆசிரியரும் அதிபரும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த மாணவி  அம்மன் மகளிர் இல்லத்தில் இருந்து கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது