தேரோட்டம்



 


(சுகிர்தகுமார் 


 அக்கரைப்பற்று பகுதியின் பன்னெடுங்கால வரலாற்றை கொண்டதும் அற்புதங்கள் நிறைந்ததுமான பத்திரகாளியம்மன்;; ஆலய வருடாந்த அலங்காரத்  திருவிழாவின் தேரோட்டம்  இன்று (01) பெருந்திரளான பக்தர்களின் வேண்டுதலோடு நடைபெற்றது.

கடந்த இரு வருடகாலமாக கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்ற அலங்காரத் திருச்சடங்கு இவ்வருடம் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இதற்கமைவாக இன்று காலை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தேரோட்டம் அக்கரைப்பற்றில் உள்ள பிரதான வீதிகிளினூடாக சென்று அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. தோரோட்டம் நடைபெற்ற வீதிகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் அம்மனை வரவேற்று வழிபாடுகளில் ஈடுபட அதிகளவான பக்தர்கள் தமது வீடுகளின் முன்னால் ஒன்று கூடி காத்திருந்து கும்பங்கள் வைத்து அம்மனை தரிசித்ததை காண முடிந்தது.

கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான திருச்சடங்கானது 29ஆம் திகதி வரை இடம்பெற்ற விசேட பூஜை மற்றும் உள்வீதி வலம் வருதலுடனும் 30ஆம் திகதி அக்கரைப்பற்று பெரியதம்பிரான் ஆலயத்திலிருந்து இடம்பெற்ற பாற்குடபவனியுடனும் இன்று இடம்பெற்ற அழகிய தேரோட்டம்  02ஆம் 03ஆம்  திகதிகளில் இடம்பெறும் அம்மனின் சிம்ம வாகன ரத பவனியுடனும்  04ஆம் திகதி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நோர்ப்பு நெல் எடுத்துவரலும் சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் கடற்குளிப்பு ஆகிய கிரியைகளுடனும் 05ஆம் திகதி காலை இடம்பெறும் பக்தி ததும்பும் தீமிதிப்பு 12ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.

ஆலய தலைவர்; தலைமையில் இடம்nறும் வருடாந்த அலங்காரத் திருச்சடங்கினையும் ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள்  யாவற்றையும் ஆலய பிரதமகுரு விஸ்வபிரம்மஸ்ரீ தா.காளிதாசன் ஆச்சாரியின் வழிகாட்டலில், விஸ்வபிரம்மஸ்ரீ த.தினேஸ்காந் ஆச்சாரி உள்ளிட்ட் உள்ளிட்ட உதவி பூசகர்களாலும் நடாத்தி வைக்கப்படவுள்ளது.