#SriPriya
ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில், பார்வையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான 5 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை குறித்த மைதானத்தில் இரு கழகங்களுக்கிடையிலாள உதை பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது.
குறித்த போட்டியில் விளையாடிய கழகத்தின் வீரர்களுக்கிடையில் எந்த விதமான பிரச்சினையும் தோன்றியிருக்கவில்லை. ஆனால், அங்கு பார்வையாளர்களில் குறித்த ஒரு பிரிவினர் விளையாட்டு வீரர்களையும் ஏனையோரையும் தலைக் கவசத்தினால், கடுந் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பாதிப்புற்றோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment