(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதுண்ட ஜீப் வண்டி பலத்த சேதமடைந்தது.
இச் சம்பவம் இன்று(18) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மொறக்கட்டான்சேனை தேவபுரப் பகுதியில் இடம்பெற்றது .
மட்டக்களப்பில் இருந்து இன்று காலை எட்டு மணியளவில் புறப்பட்ட புகையிரதம்
ஒரு மணி நேரத்தில் தேவபுரப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் குறுக்காக வந்த ஜீப் வண்டியை மோதிக் தள்ளியது. எனினும் தெய்வாதீனமாக சாரதி உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் சாரதி காயமுற்ற நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
புகையிரதத்தின் முன் பக்கமும் சிறிது சேதத்துக்கு உள்ளானது.
போலீசார் மேலதிக விசாரணை தொடர்ந்தனர்.
புகையிரதம் சுமார் ஒரு மணி நேரம் தாமதித்து மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது


Post a Comment
Post a Comment