அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாச அவர்களினால் அன்பளிப்பு



 



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு 3.9 மில்லியன் ரூபா பெறுமதியான டயலிசிஸ் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சக்தியின் சுவாசம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 56 ஆவது வைத்தியசாலையாக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்திகரிப்பு இயந்திரம் எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ரகுமான் மற்றும் மாவட்ட அமைப்பாளர் வினோகாந் ஆகியோரின் அழைப்பின் பேரில் நேற்று முன் வருகை தந்த அவர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் 39 இலட்சம் பெறுமதியான இரத்தம் சுத்திகரிப்பு இயந்திரம் கையளித்தார்.