அம்பாரை மாவட்ட தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியது



 


வி.சுகிர்தகுமார் 

  அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று மாலை
பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் ஆங்காங்கே மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

நேற்று மாலை ஆரம்பித்த பலத்த மழை  இன்று காலையில் குறைவடைந்த நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.

 அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலபிரதேசங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலத்த காற்று காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..

 இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் வாழும் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.