உலக கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற நாடுகள்



 


புவனேஸ்வர்: 


உலக கோப்பை ஹாக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயினில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. 1978-ல் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஹாக்கி நடைபெற்று வருகிறது.

 கடைசியாக 2018-ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் பெல்ஜியம் சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதுவரை 14 உலக கோப்பை ஹாக்கி போட்டி நடந்துள்ளது. இதில் பாகிஸ்தான் அதிகபட்சமாக 4 முறை (1971, 1978, 1982, 1994) உலக கோப்பையை வென்றுள்ளது. இதையும் படியுங்கள்: 2வது ஒருநாள் போட்டி - இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதல் நெதர்லாந்து (1973, 1990, 1998), ஆஸ்திரேலியா (1986, 2010, 2014) அணிகள் தலா 3 தடவையும், ஜெர்மனி 2 முறையும் (2002, 2006), இந்தியா (1975), பெல்ஜியம் (2018) தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசா மாநிலம் தொடர்ந்து 2-வது முறையாக நடத்துகிறது. கடந்த முறை புவனேஸ்வரத்தில் மட்டும் போட்டி நடந்தது. தற்போது புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியம், ரூர்கேலாவில் உள்ள பிர்சா முன்டா ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடக் கிறது. கலிங்கா ஸ்டேடியத்தில் 18 ஆயிரம் பேரும், பிர்சா முன்டா மைதானத்தில் 20 ஆயிரம் பேரும் அமரலாம். 

 ஒடிசாவில் கோலாகலமாக தொடங்கியது உலக கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடத்தப்படுகிறது. தொடர்ச்சியாக 2-வது முறையாக உலக கோப்பையை நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஒட்டு மொத்தத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் 3-வது முறையாக நடக்கிறது. 2010-ல் டெல்லியில் நடைபெற்று இருந்தது. 

15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம் வருமாறு:- ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா (ஏ பிரிவு), பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான், (பி), நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி (சி) இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ், (டி) இதையும் படியுங்கள்: இரண்டாவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. 


ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்து அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். அதே நேரம் 4 இடங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதும். 19-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது. கால் இறுதி 24 மற்றும் 25-ந்தேதிகளிலும், அரை இறுதி போட்டிகள் 27-ந்தேதியும், இறுதி போட்டி 29-ந்தேதியும் நடைபெறும்.


 இவை அனைத்தும் கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதையும் படியுங்கள்: 12 ஆண்டுக்கு முன்பு 99 ரன்னில் ஷேவாக்- இலங்கை செய்த துரோகத்தை நினைவு கூர்ந்த இந்திய ரசிகர்கள் நாளைய தொடக்க நாளில் 4 போட்டிகள் நடக்கிறது. 'டி' பிரிவில் உள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர் கொள்கிறது. நாளை இரவு 7 மணிக்கு ரூர்கேலாவில் இந்த ஆட்டம் நடக்கிறது. 

உலக கோப்பை ஹாக்கியில் இந்திய அணி ஒரு முறை தான் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கால் இறுதிக்குள் நுழைவதே இந்தியாவுக்கு சவாலானது. முன்னதாக மாலை 5 மணிக்கு இதே பிரிவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறும் 'ஏ' பிரிவு ஆட்டங்களில் அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா ( பிற்பகல் 1 மணி) ஆஸ்திரேலியா-பிரான்ஸ் ( மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன. 

சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, ஒடிசா அரசு சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. கட்டாக் மைதானத்தில் நடந்த கோலாகல தொடக்க விழாவில் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 Hockey சாம்பியன் உலக கோப்பை ஹாக்கி 

கிரிக்கெட் மேற்கு வங்காளம் 2வது ஒருநாள் போட்டி - இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதல்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். INDvSL இந்தியா இலங்கை தொடர்