கொழும்பின் புறநகர் பிலியந்தலை – மடபாத பகுதியில் நீதிவான் ஒருவரை இரண்டு மாடி வீட்டில் அடைத்து வைத்து விட்டு, அவரது 6 மில்லியன் ரூபா பெறுமதியான உத்தியோகப்பூர்வ காரை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிவான் அமில ஸ்ரீசம்பத் நேற்று சனிக்கிழமை பிலியந்தலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை மடபாதவில் உள்ள தனது சொகுசு வீட்டை வாடகை அடிப்படையில் வழங்கப்போவதாக நீதிவான் இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, தனது வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பிய நபரை சந்திப்பதற்காக நீதிவான் தனது சொகுசு காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த நபர் அந்த இடத்துக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் சென்றுள்ளார். பின்னர், நீதிவான் தமது வீட்டைக் காண்பிக்கும் போது குறித்த நபர் நீதிவானை மாடி அறையில் வைத்து பூட்டி விட்டு நீதிவானின் சொகுசு காருடன் தப்பிச் சென்றுள்ளார்.
நீதிவான் தனது காரின் சாவியை கீழ் மாடியில் வைத்திருந்ததால் சந்தேகநபர் காருடன் தப்பிச் செல்ல முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment