பாறுக் ஷிஹான்
கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் புதிய சட்ட நூலகம் இன்று சட்டத்தரணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்ப்பட்டுள்ளது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு வைபவம் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அடிப்படையில் இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.கற்பவனாக இரு அல்லது கற்று கொடுப்பவனாக இரு என்று சொல்வார்கள்.குறைந்தது கற்பவனுக்கு உதவி செய்த ஆளாகவாவது இரு சோம்பேறியாக இருந்து விடாதே என்பார்கள்.கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதியை பாரக்கின்ற போது இவ்வாறான விடயங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.அடுத்து வருகின்ற தலைமுறையான இளம் சட்டத்தரணிகளுக்கு இந்நூலகம் உந்துசக்தியை வழங்கும் .நீதி வரம்பிற்குள் நின்று இளம் சட்டத்தரணிகள் தங்களது சேவைகளை செய்ய வேண்டும்.இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவரது கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை வரும்.எனவே தான் சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் .என்றார்.
சட்டத்தரணிகள் தங்களது சேவைகளை செய்ய வேண்டும்.இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவரது கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை வரும்.எனவே தான் சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் .என்றார்.
இறுதியாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலரது பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற பெறுமதியான சட்டப்புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக புதிய சட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment