முருகமூர்த்தி குணசீலன் அல்லது சத்யா என்றழைக்கப்படும் குணசீலனை ஏப்ரல் மாதம் 4 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு போன்ற இடங்களிலும் பல் வேறுபட்ட கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் சத்யா, பன்நெடுங்காலமாக தேடப்பட்டு வந்திருந்தார். இவருக்கு எதிராக 7 வழக்குகள் அக்கரைப்பற்றுப் பொலிசாரினால் தொடுக்கப்பட்டிருந்தது. இவரை சிறைச்சாலையிலிருந்து, அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு இன்றைய தினமே குறித்த வழக்குகளில் ஆஜர்படுத்தப்பட்டுமிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திலும் கொள்ளையில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்திருந்த சமயம், இவர் அங்கு கைது செய்யப்பட்டுமிருந்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment