துண்டாக்கப்பட்ட சிறுமியின் கையினை வெற்றிகரமாகப் பொருத்திய வைத்திய நிபுணர்கள்






கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில்  உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 21 வயது யுவதி ஒருவர் தாக்கப்பட்டு இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது . 


பின்பு துண்டாக்கப்பட்ட சிறுமியின் கையின் பாகத்தை ஐஸ் பை ஒன்றினுள் இட்டு  , தாக்கப்பட்ட யுவதியை உடனடியாக கேகாலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர் . 


உடனடியாக செயற்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழு 4 மணி நேர மாற்று அறுவை சிகிச்சையின் பின் உடலிலிருந்து பிரிந்த கையை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் . 


சத்திரசிகிச்சையின் பின்னர் யுவதி கேகாலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யுவதியின் உடல்நிலை படிப்படியாக சீரடைந்த வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.