உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு




 SECDO -SRILANKA அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு


பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு


ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றினை செக்டோ -  ஸ்ரீலங்கா அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.


குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கோணாவத்தை பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று (06) வழங்கப்பட்டது.


செக்டோ -  ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.


இதன்போது கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்வர், அமைப்பின் உப தலைவர் எம்.ஏ.றம்ஸான், தவிசாளர் ஏ.எல்.றியாஸ், கொள்கைபரப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், உயர்பீட உறுப்பினர் ஏ.எல்.எம்.புஹாரி, கே.ஹஸ்புல்லா, எஸ்.ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உலர் உணவு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.