பாறுக் ஷிஹான்
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையில் அதிஉயர் தரத்திற்கு (Supra Gradel) சித்தியடைந்த கல்முனை பிரதேச செயலக பதில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் அவர்களுக்கான பாராட்டு விழா இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிஉயர் தரத்திற்கு (Supra Grade) தரம் உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்தில் நிருவாக உத்தியோகத்தராகக் கடந்த 2020.05.11ஆம் ஆண்டு முதல் பதில் கடமையாற்றிவரும் எம்.என்.எம் ரம்சான் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் மத்திய அரசினால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது சுப்ரா உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பொது எழுதுநர் சேவைக்காக, முதல் நியமனம் பெற்ற எம்.என்.எம் ரம்சான் அவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது முதல் நியமனத்தினை அதன் பின்னர் சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது,மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயம், மாவட்ட செயலகம் அம்பாறை,கல்முனை ஆகிய காரியாலயங்களில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனது திறமையான, சிறப்பான மற்றும் நேர்மையான சேவை மூலம் முகாமைத்துவ உத்தியோகத்தராக, மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக, என பல விடயப்பொறுப்புகளை ஏற்று செம்மையாகவும், விவேகமாகவும், மிக அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியிருந்தார்.
அத்துடன், கடந்த கொரோனா கொவிட்-19 பெருந்தொற்று காலப்பகுதியிலும் மற்றும் கடந்த ஆண்டு எமது நாட்டில் நிலவிய பாரிய பொருளாதார நெருக்கடியான காலத்தில் உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்வதில் அழைப்பதில் பல்வேறு அசௌகரிய நிலையினை எதிர்நோக்கிய வேளைகளிலும் ஒவ்வொரு நாளும் காரியாலயத்திற்கு சென்று கடமை நேரத்திற்கு மேலதிகமாகவும், இரவு பகல் பாராது இப்பிரதேச மக்களுக்காகவும், இப்பிரதேசத்திற்காகவும் தனது கடமைகளை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
மேற்படி நிகழ்வில் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஜனுபா அஸ்ஹர்,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எல்யாஸீன் பாவா,காணி உத்தியோகத்தர் ஏ.ஹிபாயத்துல்லா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான சனூபா நெளபல்,எச்.எல்.எம் மபாஸ் உட்பட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment