துணிச்சல்மிகு பத்தரிகையாளர், வார #உரை_கல் நிறுவுனர்புவி ரஹ்மதுல்லாஹ் மறைவு



 


மூத்த ஊடகவியலாளர் வார #உரை_கல் பத்திரிகையின் ஆசிரியர் #புவி_றஹ்மத்துல்லாஹ் மறைந்தார்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.


1960களில் இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகைளில் ஒன்றான தினபதியில் ஊடக பயணத்தை ஆரம்பித்த இவர், 2000ஆம் ஆண்டுகளில் காத்தான்குடியில் வார உரை கல் என்ற பத்திரிகையின் மூலம் துளியளவும் யாருக்கும் அஞ்சாமல், ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் கண்டித்து எழுதியவர்,


அதற்காக பெருமளவில் பழிவாங்கப்பட்டவர்.


அநியாயக்கார அரசியல்வாதிகளின் கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர், வெறும் சொல்லில் இல்லாமல் பல சமூக விடயங்களை செயலில் காட்டியவர்.


எவ்வளவு தடைகள் வந்த போதிலும், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்மாதிரியாக செயற்பட்ட ஒரு  ஊடகவியலாளர்.


ஜனாஸா தொழுகை ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் நடத்தப்பட்டு நூரானியா ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Mathy Anpan

Mohamed Mehboo