வி.சுகிர்தகுமார்
பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் கந்த சஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு ஆலய முன்றலில் நேற்று மாலை (27)வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய வசந்த மண்டபத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜையையடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய் எழுந்தருளிய முருகப்பெருமான் அடியார்கள் புடைசூழ ஆலய உள்வீதி வலம் வந்து பின்னர் வெளியுலா சென்றார்.
இதேநேரம் ஆலயத்தை சுற்றிவந்த சூரபத்மனுக்குனும் முருகப்பெருமானுக்கும் போர் நடைபெற்றது.
மீண்டும் ஆலய முன்றலில் சூரசம்ஹார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் மாமர வடிவெடுத்த சூரபத்மன் வதம் செய்யப்பட்டு சேவலாகவும் கொடியாகவும் மாற்றுரு பெற்றான்.
ஆலய தலைவர் க.லோகிதராஜா தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் நடாத்தினார்.
பூஜை வழிபாடுகளில் ஆலய முகாமைக்காரர் சபை உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment