நுவரெலியா கிரெகெரி வாவியில்




நுவரெலியா கிரெகெரி வாவியில்

 தரையிறங்கத் தயாரான சிறிய ரக விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


@CM