கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு தண்டப்பணம் அறவீடு




 பாறுக் ஷிஹான்

கட்டாக்காலிகளை  பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

 பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் சுட்டி காட்டியுள்ள போதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வியுடன் இப்பிரச்சினை தொடர் பிரச்சினையாக அதிகரித்திருந்தது.

கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்விற்கு அச்சுறுத்தல் விடுகின்ற ஒரு பேசு பொருளாக மாறி  இருந்தது.

இவ்வாறான பிரச்சினைக்கு  கல்முனை வர்த்தக சங்கம் கல்முனை பொதுச்சந்தை சங்கம் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள்  மாநகர சபை மற்றும் பொலிஸாரிடம் குறிப்பிட்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை  சுமத்துவதுடன் குறித்த பிரச்சினை தீர்ந்த பாடில்லை என மக்கள் அங்கலாய்த்தனர்.

இது குறித்து  கல்முனை மாநகர சபையினரிடம் கேட்டால் பொலிஸார் தமக்கு ஒத்துழைப்பு இல்லை என கூறுகின்றார்கள்.ஆனால் பொலிஸாரிடம் இவ்வாறு கேள்வி கேட்டால் மாநகர சபை இவ்விடயத்தில் நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு தருவதற்கு தயாராக உள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இதற்கமைய தற்போது கட்டாக்காலி மாடுகள்   மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.