386 அலங்கார செடிகளுடன் ஒருவர் கைது



 


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (10) சுமார் 600,000 மதிப்புள்ள அலங்கார செடிகளை நாட்டுக்கு கொண்டுவர முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கப் பிரிவு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தாய்லாந்தின் பெங்கொங்கிலிருந்து இன்று அதிகாலை 12.35இற்கு நாட்டுக்கு வந்துள்ளார்.


சந்தேக நபரின் பையை ஆய்வு செய்த அதிகாரிகள் சுமார் 386 அலங்காரச் செடிகளைக் கணடுபிடித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு