(இச் செய்தி புதுப்பிக்கப்பட்டுவருகின்றது)
மிக வேகமாக செலுத்திய கார்-சாரதி முச்சக்கர வண்டியில் மோதுண்டதால், குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி கடுங்காயமுற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அவசர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.
தற்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக, கடுங்காயமுற்றவர், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த காரைச் செலுத்திய சாரதி, இம்முறை சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாகவும் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தி வந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில், முச்சக்கர வண்டி முச்சக்கர.வண்டி முழுமையாக.சேதமடைந்துள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment
Post a Comment