அக்கரைப்பற்றில் விபத்தினால்,அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கடுங்காயமேற்படுத்திய 16 வயது மாணவனை எதிர்வரும் 16ந் திகதி வரை சிறுவர் காப்பாத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று, பொலிசார் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment