( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் கடலரிப்பு சமீப காலங்களில் மிகவும் வேகமடைந்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் மற்றும் நிலப்பரப்புகள் கடலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சில குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் படகு நிறுத்தும் இடங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியிருந்த போதிலும், இதுவரை நிலையான தீர்வு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்காலிக கற்கள் அடைப்போ அல்லது கடற்கரை பாதுகாப்புச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மக்கள் குறைபடுகின்றனர்.
“ஒவ்வொரு நாளும் கடல் மேலும் மேலும் கரையை உடைத்து வருகிறது. எங்கள் வாழ்வாதாரமும், வீடுகளும் ஆபத்தில் உள்ளன. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை கட்டுக்கட்டுப்பாடுகளை மீறிவிடும்” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அவசரமாக சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நிரந்தர கடற்கரை பாதுகாப்புத் திட்டம் ஒன்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அட்டப்பள்ளம் கடலரிப்பு பிரச்சினை தற்போது அவசர தீர்வு தேவைப்படும் சூழ்நிலையாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறைகள் எப்போது செயல்படுகின்றன என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.
அங்குள்ள கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில்..


Post a Comment
Post a Comment