மிளகாய் நாற்றுக்கள் வழங்கி வைப்பு



 

( எம். என்.எம்.அப்ராஸ்)


 விவசாய திணைக்களத்தினால் மிளகாய் பயிர் செய்கையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பிரிவில் ஐம்பது வீதம் 50% மானிய விலையில் நாற்று வளர்ப்புப்பைகள் வழங்கிய மிளகாய் செய்கை மேற்கொள்ளும் வீட்டுத் தோட்ட செய்கையாளருக்கு உயர் விளைச்சலை தரும் MICHHY -01 மிளகாய் நாற்றுக்கள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று(06)இடம்பெற்றது. 

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் டப்ளியு.ஜி.ஆர்.ருக்மன் சோமரத்ன மற்றும் அம்பாரை மாவட்ட மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார்,கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய தொழி நுட்ப உதவியாளர் சி.அஸ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர். 

வீட்டுத் தோட்ட மிளகாய் செய்கை மேற்கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்குறித்த MICHHY -01 மிளகாய் நாற்றுகளுக்கான உர தயாரிப்பு அதன் பயன்கள் தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளினால் வீட்டு தோட்ட செய்கை செய்கையாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.