பொலன்னறுவை பிரதான வீதியில் குடைசாய்ந்த கொள்கலன்




 பொலன்னறுவை பிரதான வீதியில் குடைசாய்ந்த கொள்கலன் லொறி...!


ஹிங்குராங்கொட  பொலன்னறுவை பிரதான வீதியில்  கொள்கலன் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.


இச் சம்பவம் இன்று ( 23 ) காலையில் இடம்பெற்றுள்ளது . வேகமாகச் சென்ற கொள்கலன் லொறி (Container) கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் லொறியின் சாரதி பலத்த  காயமடைந்த நிலையில்  உடனடியாக ஹிங்குராங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வருகின்றார்.