வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட
கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.
காரைதீவு காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற , பலரையும் கவர்ந்த இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் முன்னாள் வீரரும், ஒஸ்கார் அமைப்பின் செயலாளருமான திருச்செல்வம் லாவண்யன் கலந்து சிறப்பித்தார். அவர் முன்னிலையில், விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் ஆரம்பிப்பாளராக இருந்து நடாத்தி வைத்தார். ஆனந்தன் அமிர்தானந்தன் களத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்தார்.
கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மூன்று அணிகள் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற "நல்லமா" அணியினருக்கும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Post a Comment
Post a Comment