ஆலையடிவேம்பு நிருபர்
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த பிரம்மோட்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று(23) பக்;தி பூர்வமாக நடைபெற்றது.
கடந்த 20ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமான திருவிழாவானது 23 ஆம் திகதி இன்று இடம்பெற்ற கொடியேற்றம் ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெறும் ஆலய சாலகோபுர கும்பாபிசேகம் மற்றும் தீர்த்தோற்சவம் 02ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனம் 03ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறுகின்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து கொடிச்சீலை எடுத்து வருவதற்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிச்சீலையும் எடுத்துவரப்பட்டது.
பின்னர் நடைபெற்ற யாக பூஜையுடன் பிரதான கும்ப பிரதட்சனையுடன் கொடிச்சீலையும் உள்வீதி வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கான அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன்; பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றமும் இடம்பெற்றது.
பின்னர் மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரரை அலங்கரிக்கப்பட்ட தேரில் இருத்தி அடியார்களினால் வெளி வீதிவலமாக சுமந்து சென்றதுடன் வசந்த மண்டபத்தில் அமர்த்தப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.
பிரம்மோற்சவ தீர்த்தோற்சவ பெருவிழாவின் பூஜை வழிபாடுகளை உற்சவகால பிரதமகுரு வித்யாசாகர் கிரியாகலாமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்யகிருஸ்ண குமார குருக்கள் தலைமையிலான குருமார்கள்; நடாத்தி வைத்தனர்.
கொடியேற்ற வழிபாடுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)

Post a Comment
Post a Comment