மாற்றுத்திறனாளிகளுக்கான நெசவு பயிற்சி!



  


நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி விஜயம் 

( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர்  கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை  மாவட்ட பரிசோதகர்  கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அச்சமயம் ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா சமூகமளித்திருந்தார்.

அங்கு நடைபெறும் நெசவுப் பயிற்சியை பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார்.

பயிலுனர்களுக்கு மாதாந்தம் 7500 ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்.