விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 14 பேர் பலி



 


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று பகலில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அருகாமையில் உள்ள பகுதிகளில் அதிர்வுகளை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.