'2 நாளில் ஏதேனும் நடக்கலாம்': இரானுடன் மீண்டும் பேச்சு நடத்துவது பற்றி டிரம்ப் கூறியது என்ன?



 


இரானில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.

"நீங்கள் அங்கேயே (பாகிஸ்தான்) இருக்க வேண்டும், உண்மையில், அடுத்த இரண்டு நாட்களில் ஏதேனும் நடக்கலாம். நாங்கள் அங்கு செல்ல அதிக விருப்பத்துடன் இருக்கிறோம்," என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறி இந்த நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில் இரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு எந்தக் கப்பல்களும் செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.