பொகவந்தலாவையில் பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ ராணிக்காடு பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து இன்று (28) காலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொகவந்தலாவ பிராந்திய வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரய தெரிவித்தார்.
ராணிக்காடு - பொகவந்தலாவ பிரதான வீதியில் கேம்பியன் தோட்டப் பகுதியில் காலை சுமார் 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
பேருந்தில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே, இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செ.திவாகரன்


Post a Comment
Post a Comment