ஹெட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது சூப்பர் கிங்ஸ்




 2026 ஐபிஎல் சீசனின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இதற்குமுன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த சிஎஸ்கே இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும், சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருந்தது. இன்று (ஏப்ரல் 11) அதற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதரடியாக ஆடி சதமடித்து சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.