🚨 ஈரான் – அமெரிக்கா அணு ஒப்பந்தம் நெருக்கத்தில்? ட்ரம்ப் அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்காவின் முக்கிய நிபந்தனைகளுக்கு இணங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளதுடன், ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
📍 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அதன் கையெழுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், தேவையானால் தானும் நேரில் செல்லலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
📅 இந்த வார இறுதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், தற்போதைய போர்நிறுத்தம் முடிவடையும் முன்னர் முடிவு எட்டப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
⚠️ ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🌍 இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Iran #USA #Trump #NuclearDeal #BreakingNews #WorldNews #MiddleEast #MansoorRiyas


Post a Comment
Post a Comment