இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இலங்கையில்




 இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இலங்கைக்கான தனது இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்தார்.


இந்திய துணை ஜனாதிபதி ஒருவரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். 


இவ்விஜயத்தின்போது இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அவர் ,இந்திய அரசின் நன்கொடை ஊடான இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.