தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்,விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது



 

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாடில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூர் தொகுதியில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.