Update:- ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு




 ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்டபோதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.


விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.