கிழக்கு ஆப்கானிஸ்தானில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பங்களுடன் லொறிகளில் பயணித்து திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த லொறி, ஜலாலாபாத்–காபூல் வீதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment