( வி.ரி.சகாதேவராஜா)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை மறுநாள் 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை , மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, நிந்தவூர் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளார்.
அத்துடன், அம்பாறை நகரில் அமையவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் அவர் இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக, அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.


Post a Comment
Post a Comment