ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய வர்த்தகக் கப்பல் தாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
“ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல் ஒன்றின்மீது நேற்று (13) நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், வர்த்தகக் கப்பல்களும் பொதுமக்களான மாலுமிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என வெளியுறவுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment