களுத்துறையில் துப்பாக்கிச் சூடு - தொழிலதிபர் உயிரிழப்பு




 களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.


இதில் காயமடைந்த தொழிலதிபர் நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.