வாழைச்சேனை அந்நூர் மாணவர்கள் இருவர் கடினப் பந்து அணிக்குத் தெரிவு
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவர்களான ஆ.எம்.அஹ்ஷன் மற்றும் ஏ.எல்.எம். அப்fஹம் ஸஹ்ரி ஆகிய இருவரும் மட்டக்களப்பு மாவட்ட 19 வயது கடினப் பந்து கிரிக்கெட் அணிக்காக (2026) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன் அவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிய கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன் என அதிபர் எம்.பி.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால போட்டிகளில் சிறப்பான சாதனைகள் புரிய தனது நல்வாழ்த்துக்களை இரு மாணவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment