( வி.ரி.சகாதேவராஜா)
அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய
கல்முனை வலய மட்ட போட்டிகள் நேற்று (23) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்றன.
அங்குரார்ப்பண நிகழ்வு விபுலானந்தர் அரங்கிலே தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் யூஎல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது.
அங்கு, அடுத்த வருடம் ஓய்வு பெறஇருக்கின்ற கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
போட்டிகளில், கல்முனை (முஸ்லிம்), கல்முனை ( தமிழ்), சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய 05 கோட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இம்முறை வலய மட்ட போட்டிக்கு அடுத்ததாக மாவட்டமட்ட போட்டி நடைபெறாது . நேராக மாகாணமட்ட போட்டிக்கு இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் ஜெஸ்மி மூஸா தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment