சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்



 


இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியும் மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகமுமான விமல் எஸ்.கே.லியனகமவை இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி பி.அருகொட இன்று (05) தனது சேவைக்காலத்தை நிறைவு செய்கிறார்.


அதன்படி, லியனகம நாளை (06) முதல் சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.