காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானம்



 


🟡 காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானம்


டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 06.05.2026 அன்று நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது போக்குவரத்து நடைமுறைகள், வர்த்தக நிலையங்களை ஒழுங்கு படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


01. டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்துதல்.


2. Transport வாகனங்கள் காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மாத்திரம் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி.


3. வியாபார நிலையங்களுக்கு முன்னால் உரிமையாளரின் ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் நிறுத்த அனுமதி.


4. Gas Company வாகனங்கள் மாற்றுப்பதையாக முதியோர் இல்ல வீதியினை பயன்படுத்தல்.

ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிஸார், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,  காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,

காத்தான்குடி வர்த்தக சங்கத்தினுடைய பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.