கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்' முனையத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்த முயன்ற டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயது மாணவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலிருந்து டுபாய் வழியாக இலங்கை வந்த விமானத்தில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.அவரது 2 பயணப் பொதிகளில் 146 பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.639 கிலோ கிராம் ஹசீஸ் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 37 கோடியே 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய வரலாற்றிலேயே 'கோல்ட் ரூட்' வசதியைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை. சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment